மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Monday, 17 October 2011

படமே வெளிவரல... அதற்குள் விளம்பரத்தில் பிஸி?


நடித்த முதல் படமே வரவில்லை. அதற்குள் விளம்பர உலகத்தின் ’வெல்லக்கட்டி’ ஆகிவிட்டார் சனம். பார்க்கிற சனமெல்லாம் அம்புட்டு அழகு என்று பாராட்டுகிற இந்த சனம், அம்புலி படத்தின் ஹீரோயின் என்பதை சினிமா ரசிகர்கள் அறிவார்கள்.
இனிமேல் சாப்பாட்டு ப்ரியர்களும் அறிகிற அளவுக்கு உணவின் வகைகளையும்,Lekha Foodsஅதை சமைக்கும் முறைகளையும் சொல்லும் ஒரு வெப்சைட் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் இந்த சனம்.lekhafoods.com எனும் இந்த இணையதளத்தில் சுமார் 3 லட்சம் வகையான உணவுகளை அறிமுகப்படுத்த இருக்கிறார்களாம். தற்போது 30 ஆயிரம் டிஷ்கள் ரெடி. அதுவும் அசத்தலான சமையல் குறிப்புகளுடன்.
ஏவிஎம் ஸ்டுடியோவில் கலர்ஃபுல் செட் போட்டு இந்த சனத்தை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதற்குள் விஷயம் வெளியில் பரவி, ரங்கநாதன் தெரு முதலாளிகளிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதாம் இந்த அழகு பொண்ணுக்கு. (அய்யோவ்... விளம்பரத்தில் நடிக்கதான்)
அதிருக்கட்டும்... lekhafoods.com -ல் என்னென்ன விசேஷம்? உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நாட்டில் எங்கு சுவையான உணவு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு ஹோட்டலை பற்றிய அறிமுகம் இது. படிக்கும்போதே அத்தனை சுவாரஸ்யம்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் இருக்கிறதாம் இந்த ஹோட்டல். சாப்பிட போகிறவர்களை ராஜLekha Foodsமரியாதையோடு ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உள்ளே போய்விட்டால் வெளிச்சமே கிடையாது. கும்மிருட்டு. அங்கிருக்கும் பணியாளர்களே உங்களை கையை பிடித்து அழைத்துச் செல்வார்கள். தேவையான உணவுகளை உங்கள் டேபிளில் சிக்கலில்லாமல் பரிமாறுவார்கள். சாப்பிட்டு முடித்ததும் உங்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே பாதுகாப்போடு வெளியே கொண்டு வந்துவிடுவார்கள்.
ஏன் இப்படி ஒரு கும்மிருட்டு விருந்து? வேறொன்றுமில்லை, அவர்கள் அத்தனை பேரும் கண் பார்வையற்றவர்களாம். இந்த வினோத அனுபவத்தை விலாவாரியாக விவரிக்கிறார்கள் இந்த வெப்சைட்டில். இதுபோல ஆயிரம் சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது.
சனத்தின் முதல் அறிமுகமே விஷயமுள்ளவர்களுடன்தான்... வாழ்த்துக்கள் பொண்ணு!
                                  www.tamilcinema.com

வேலூர் மாவட்டம்


நகர போலீசில் நல்ல போலீசும் உண்டு. இந்த ஒரு வரிதான் இந்த கதையின் மொத்த சரக்கு, சாரம்சம் எல்லாமே! ஏதோ இவரே டிபார்ட்மென்ட் ரிட்டையர்மென்ட்டாக இருப்பாரோ என்று ஐயுறுகிற அளவுக்கு நுணுக்கமாக ஆராய்ந்து கதை எழுதியிருக்கிறார் ஆர்.என்.ஆர் மனோகர். சல்யூட் சார்...
காக்கி சட்டையை போட்டாலே ஏழெட்டு நட்டு போல்ட்டுகளை விழுங்கிய மாதிரி ஒரு மிடுக்கு வரும். நந்தாவிடம் அதை அப்படியே பார்க்க முடிகிறது. பார்வையில் ஆரம்பித்து பட்டன் போடுவதை கூட அந்த மிடுக்கு குறையாமல் செய்திருக்கிறார். இந்த டெடிக்கேஷன் அவரை எங்கேயோ கொண்டு போய் உட்கார வைக்கப் போகிறது. நல்லது, கதைக்கு வருவோம்.
வேலு£ர் மாவட்டத்திற்கு அசிஸ்டென்ட் கமிஷனராக வந்து சேர்கிறார் நந்தா. அங்கே அமைச்சரின் அல்லக்கை அழகம் பெருமாளுக்கும் இவருக்கும் உரசிக் கொள்கிறது. சட்டம் ஒழுங்குதான் முக்கியம் என்று திமிரும் நந்தாவை, சத்தம் போடாதே தம்பி என்று தனது பாணியில் தட்டி வைக்கிறார் அழகம் பெருமாள்.
பெட்ரூமில் ஐட்டத்துடன் இவர் இருக்க, வெளியே காவல் காக்க வேண்டிய கேவலமான நிலை நந்தாவுக்கு. இத்தனையும் பொறுத்துக் கொள்ளும் அவர், ஒரு கட்டத்தில் எரிமலையாக வெடித்து சிதறுகிறார். பட்ட பகலில், பப்ளிக் முன்னால் அழகம் பெருமாள் அழுக்கு பெருமாளாகிற அளவுக்கு அடித்து கிழிக்கிறார். அப்புறமென்ன? பதிலுக்கு அவர் தரப்பு ஆட்கள் போட்டு தள்ள போலீஸ் நந்தா, பாலீஷ் குறைந்து குற்றுயுரும் குலையுயிருமாக மருத்துவமனையில்.
தனது பணியையே ராஜினாமா செய்துவிட்டு தோல்வியோடு திரும்பும் அவரை மீண்டும் அதே ஊருக்கு பணிக்கு அனுப்புகிறது உயரதிகாரிகள் தரப்பு. இரண்டாம் முறையாக போராட்டத்தை ஆரம்பிக்கும் அவர் காக்கி சட்டையின் கம்பீரத்தை நிலை நாட்டினாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
படத்தின் வேகத்தை குறைப்பது மாதிரியான காட்சிகள் குறைவுதான். அப்படி வருகிற ஒன்றிரண்டு காட்சிகள் சந்தானம், சிங்கமுத்து சம்பந்தப்பட்ட காட்சிகள். வயிறு வீங்கிப் போகிறது நமக்கு. அதிலும், சந்தானத்தின் டபுள் மீனிங் காமெடியை எரிச்சலுறாமல் ரசிப்பது ஆச்சர்யம்தான். சந்தானமே போலீஸ்தான் என்பதால் பாதிநேரம் நந்தாவுடனேயே டிராவல் செய்வதால் கதையும் தடம் மாறாமல் டிராவல் செய்கிறது.
நந்தாவுக்கு ஜோடி பூர்ணா. வீட்டிற்குள் வரும் ரவுடிகளை தனி ஆளாக தடுக்க போராடும் அவரது பதற்றம், நம்மையும் தொற்றிக் கொள்வது பயங்கரம். மற்றபடி ரெண்டு டூயட், கொஞ்சம் கண்ணீர் என்று தனது வேலையை முடித்துக் கொள்கிறார் அவர்.
மந்திரியாக நடித்திருக்கும் நீலகண்டன் இத்தனை நாட்களாக எங்கிருந்தார்? அலட்டிக் கொள்ளாத நடிப்பு. அமைச்சருக்குரிய அத்தனை அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். இனிமேல் நிறைய பார்க்கலாம்...
சுந்தர்சி பாபுவின் இசையில் சில பாடல்கள் பரவாயில்லை. வெற்றியின் ஒளிப்பதிவு விசேஷமாக இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில்.
எடிட்டிங், போலீஸ் பார்வை போலவே நறுக் கட்டிங்.
காவல் 'குறை' என்றே இத்துறையை வர்ணிப்பவர்கள் இப்படத்தை பார்த்தால் கப்சிப் ஆவார்கள். அந்த வகையில் இந்த மாவட்டம் பெரிசு!
-ஆர்.எஸ்.அந்தணன்
                                         www.tamilcinema.com

படப்பிடிப்பில் விபத்து -அஜீத் சிந்திய ரத்தம்


அஜீத் ஆசை ஆசையாக நடித்து வரும் பில்லா -2. ரஜினி நடித்த பில்லா படத்தை மீண்டும் ரீமேக் செய்து நடித்த அஜீத் அப்படத்தின் தாறுமாறான ஹிட்டுக்கு பிறகு மீண்டும் அதே சப்ஜெக்ட்டில் நடிக்க ஆசைப்பட்டார். அதன் விளைவாக உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் படம்தான் பில்லா-2.
இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் இதில் நடிக்கAjithஒப்புக் கொண்ட நடிகையை திடீரென்று அனுப்பி வைத்துவிட்டார்கள். அவருக்கு பதிலாக பார்வதி ஒமணக்குட்டன் நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது என் கனவுகளில் ஒன்று என்றெல்லாம் கூறி, அஜீத் ரசிகர்களையும் பரவசத்திற்குள்ளாக்கிய இந்த பார்வதிக்கு நேற்றைய தினம் கண்ணீர் தினம். என்னாச்சு?
கடந்த சில தினங்களாக சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவாவில் நடைபெறும் இந்த ஷுட்டிங்கில் அஜீத்துக்கு அடிபட்டு கைகள் கிழிந்து ரத்தம் சொட்டியது. இதை கண்டு யூனிட்டே பதற, ரொம்பவே பதறிப் போனாராம் பார்வதி.
ஐஸ்வாட்டர் பாட்டில் ஒன்றால் எதிரியின் தலையில் அடிப்பது போல காட்சி. அது டம்மி பாட்டில்தான் என்றாலும் வாகாக அடிக்கவில்லை என்றால் கையை கிழிக்கும் அபாயம் இருந்தது. ஜாக்கிரதையாகவே இந்த காட்சியை அணுகிய அஜீத், எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்து கைகளை கிழித்துக் கொண்டார்.
இந்த தகவல் சென்னையிலிருக்கும் தனது குடும்பத்தினருக்கு தெரிய வேண்டாம் என்றாராம் அஜீத். இதோ நாங்க சொல்லிட்டோம்... 'தங்கச்சி, சீக்கிரமா கோவாவுக்கு போங்க!'
                                www.tamilcinema.com