மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday, 7 October 2011

தமிழ்நாட்டில் ரா ஒன் அபிராமி ராமநாதன் வெளியீடு


9ந் தேதி சென்னை வருகிறார் ஷாருக்கான். இந்த வருகை ரஜினியை சந்தித்து நன்றி கூறத்தானாம்.
ரா ஒன் படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று பல காலமாகவே கேட்டு வந்தார்Ra-Oneஷாருக். இந்த நிலையில்தான் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது ரஜினிக்கு. ஆனால் தான் கொடுத்த வாக்குறுதியை எப்படியோ நிறைவேற்றிக் கொடுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார்.
பாலிவுட் படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்படுவது புதுசில்லை. ஆனால் எந்தவொரு படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு இருக்கும் என்று கருதப்படுகிறது. காரணம் ரஜினியை தவிர வேறொன்றும் இல்லை. தற்போது தலைவர் எப்படியிருக்கிறார் என்பதை காண அவரது ரசிகர்கள் தவமாய் தவமிருக்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் போதே வீடியோ மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர் சிகிச்சை மூடிந்து வீடு திரும்பிய பின்பும் அதற்கான முயற்சி நடைபெறவே இல்லை.
அவர் எப்படியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள துடிக்கும் ரசிகர்களுக்கு ரஜினி ஒரு காட்சியில் நடித்த ரா ஒன் பெரிய வரப்பிரசாதம் அல்லவா?
தமிழ்நாட்டில் கணிசமான அளவு தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் அபிராமி மெகாமால் உரிமையாளருமான அபிராமி ராமநாதன்.
                            http://www.tamilcinema.com

கிணற்றில் விழுந்த ஹீரோ


சீமான் கதையின் நாயகனாகவும், முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் படம் "கண்டுபிடி கண்டுபிடி". மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவா என்ற இருபத்தியொரு  வயதான இளைஞருடன் இணைந்து தயாரிக்கிறார் மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ். பிரபு சாலமனின் உதவியாளரான ராம் சுப்பாராமன் இயக்குகிறார்.

போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் "K2"வின் படப்பிடிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார். 

காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழமையான கிணறொன்றை கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள். 

நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணற்றோரமாகவே தவறி விழுந்தார். தலையில் அடிபட்டவர் மயக்க நிலைக்கு செல்ல, அந்த ஊரைச் சேர்ந்த ரெண்டு பேர் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து அவரை மீட்டு கரை சேர்த்தனர். 

அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது..
Tharun chatriya
Tharun chatriya
Tharun chatriya
Tharun chatriya
Tharun chatriya
Tharun chatriya
Tharun chatriya
Tharun chatriya
Tharun chatriya
Tharun chatriya

முதல்வருடன் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு ?


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் S.A.Chandrasekar - Jayalalithaதலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் இன்னொரு அணியும் மோதிக் கொள்கிறார்கள். இருவருமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் அரசின் சலுகைகளை உரிமையோடு பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை சங்க உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவே பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
யாருக்கு வாக்களிப்பது என்பதுதான் அந்த குழப்பம். 2007 ம் ஆண்டிலிருந்து ஒரு படத்திற்கு ஏழு லட்சம் வீதம் சுமார் 500 படங்களுக்கு அரசின் மானியத் தொகை தர வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த தொகை கடந்த ஆட்சியிலேயே வழங்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையில் இருந்த உறுப்பினர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே நிலவியது. இந்த முறை இந்த தொகையை வாங்கித்தர இருவருமே முயற்சி எடுப்பதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முதல் நாள் கூட தங்கள் பலத்தை காண்பிப்பதற்காக தனித்தனி ஆதரவாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்க முன் அனுமதி வாங்கியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கும் இந்த சந்திப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று எஸ்.ஏ.சி தரப்பில் கூறப்பட்டாலும், முதல்வருடனான இந்த சந்திப்பு தேர்தல் முடிவுகளை லேசாக அசைக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
                      http://www.tamilcinema.com