மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday, 6 November 2011

பவன் கல்யாணுக்கு டப்பிங்! - அஜித் மறுப்பு!

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு, நான் டப்பிங் கொடுப்பதாக வந்த செய்தி உண்மையில்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். நடிகர் அஜித்துக்கு "பில்லா" எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் டைரக்டர் விஷ்ணுவர்தன். இவர் தான் "பில்லா" படத்தை தொடர்ந்து, தற்போது அஜித் நடித்து வரும், "பில்லா-2" படத்தையும் இயக்குவதாக இருந்தார்.

ஆனால் சில, பல பிரச்சனைகளால் எடுக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து "உன்னைப்போல் ஒருவன்" படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இப்படத்தை இயக்கி வருகிறார். "பில்லா-2" படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விஷ்ணுவர்தன், தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து பஞ்சா எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழில் பவன் கல்யாணுக்கு, டப்பிங் வாய்ஸ் கொடுக்க அஜித்தை, விஷ்ணுவர்தன் அணுகியதாகவும், அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்ததாகவும், சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. 

ஆனால் இத
னை அஜித்தை மறுத்துள்ளார். தற்போது, பில்லா-2 சூட்டிங்கில் இருக்கும் அஜித், இதுபற்றி கூறுகையில், நானும் இந்த செய்தியை பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் இதில் உண்மையில்லை, இது வெறும் வதந்திதான் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment