புதிதாக பாட வந்துள்ள பாடகர்கள் நல்ல திறமைசாலிகளாக உள்ளனர், என்றார் பி சுசீலா. சேலத்தில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுசீலா கூறுகையில், "இன்றைக்கும் எனது குரல் நன்றாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். அது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் கூறமுடியும். இப்போது உள்ள பாடகர்கள் எங்களை விட திறமைசாலிகள். நன்றாக பாடுகிறார்கள். பாடல்களும் நன்றாக இருக்கின்றன. இங்கு நடனம் ஆடியவர்களை பார்த்து வியந்து போனேன். அவ்வளவு திறமைகளிடம் உள்ளன. இதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதுபோல் அனைத்து குழந்தைகளிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். இதை வெளிக்கொண்டு வர வேண்டும். மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உண்டு. மாணவ, மாணவிகள் செய்ய விரும்புவதை பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள். இதனால் மாணவ, மாணவிகள் பெற்றோர் விரும்புவதை நிறைவேற்றி வைக்க வேண்டும்," என்றார். எவ்வளவோ பாடல்களை பாடி உள்ளீர்கள். உங்களால் மறக்க முடியாத அனுபவம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது, "நிறைய இருக்கிறது. இதை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன்," என்றார். பிறகு அவர் உன்னை காணாத, ஆலய மணி போன்ற பாடல்களை பாடினார். |
Tuesday, 8 November 2011
புதிய பாடகர்கள் திறமைசாலிகள்! - பி சுசீலா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment