மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday, 6 November 2011

அமலாபாலுடன் காரைக்குடியில் ஆர்யா! - வேட்டை!


வேட்டை படத்தின் சூட்டிங் காரைக்குடியில் நடந்து வருகிறது. நாயகன் ஆர்யாவும், நாயகி அமலாபாலும் காரைக்குடியில் முகாமிட்டு சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்கள். `பையா படத்தை தயாரித்து, இயக்கிய டைரக்டர் லிங்குசாமி அடுத்து, `வேட்டை என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.

ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் நடிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் காரைக்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், மணப்பாடு ஆகிய இடங்களில் நடந்தது. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் காரைக்குடியில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஆர்யா - அமலா பால் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment