மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday, 6 November 2011

இந்திப் படம் இயக்குகிறார் தனுஷ்!

இயக்குநராக வேண்டும் என்பது தனுஷின் ஆரம்ப காலக் கனவு. அவர் துள்ளுவதோ இளமை படம் செய்த போதே, நமக்களித்த ஒரு பேட்டியில், நிச்சயம் நான் படத்தை இயக்குவேன் என்று கூறியிருந்தார். இப்போது தனுஷின் கனவு நிறைவேறுகிறது. முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார் தனுஷ். ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்!

இப்போது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' படத்தில் நடித்து வரும் தனுஷ், இந்தப் படத்தில் மனைவிக்கு உதவியாகவும் இருந்து வருகிறார். ஏற்கெனவே பல குறும்படங்களை இயக்கியுள்ள தனுஷ், தனது முதல் முயற்சியை இந்தியில் தொடங்கியுள்ளார். சமீபத்தில் மும்பையில் ஒரு டாப் நடிகரை சந்தித்து தனுஷ் கதை சொன்னாராம். ரஜினி மருமகன் என்பதால், தனுஷுக்கு ஏக வரவேற்பாம். 

தனுஷ் சொன்ன கதை நடிகருக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால், ரஜினி மருமகன் என்பதையும் தா
ண்டி, தனுஷ் மீது தனி மரியாதையே வந்துவிட்டதாம் நடிகருக்கு. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பித்துவிடலாம் என்று கூறியுள்ளாராம் நடிகர். தனுஷ் இதில் கவுரவே வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் வேலைதான் முக்கியம் என்பதால் இந்த முடிவாம். 

முதல் படத்தை இந்தியில் இயக்க முடிவு செய்திருப்பது ஏன் என்று கேட்டபோது, "ஏன் இந்தியில் இயக்கக் கூடாது? கதையும் கலைஞர்களும் சரியாக அமையும்போது மொழி ஒரு பிரச்சினையில்லை. இந்தியில் படம் செய்தால் இன்னும் பெரிய ரீச் கிடைக்கிறது," என்றார். 2012- மத்தியில் இந்தப் படத்தைத் தொடங்குகிறார் தனுஷ்.

No comments:

Post a Comment