கெளதம் மேனனின் நாயகிகள் இருவருக்கு இடையே பனிப்போர் மூண்டுள்ளதாம். யார் பெரியவர், யாருக்கு கிராக்கி அதிகம் என்பதில் இந்த மோதல் மூண்டு புகைச்சல் அதிகமாகியுள்ளதாம். கெளதம் மேனனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சமீரா ரெட்டி. அதேபோல கெளதம் மேனன் கைப்பிடித்து தூக்கி விட்டவர் சமந்தா. சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சமீரா. அதேபோல தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. நடுநிசி நாய்கள் படத்தில் சமீரா நாயகியாக நடித்தார். அதேசமயம், சமந்தாவையும் ஒரு முக்கிய வேடத்தி்ல கெளரவ வேடத்தில் நடிக்க வைத்தார் கெளதம் மேனன். அதாவது தனித் தனியாக இயக்கிய இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் சேர்த்து இயக்கினார் கெளதம். அங்குதான் புகைச்சலாகி விட்டதாக கூறுகிறார்கள். சமந்தா மீதுதான் கெளதம் மேனன் அதிகம் அக்கறை காட்டுவதாக நினைக்கிறாராம் சமீரா ரெட்டி. தன்னை தற்போது ஓரம் கட்டுவது போல கெளதம் மேனன் நடந்து கொள்கிறார். மாறாக சமந்தாவுக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கிறார் என்று குமுறுகிறாராம் சமீரா. சமீரா தற்போது வேறு வேறு படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம், தொடர்நது கெளதம் மேனன் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சமந்தா. இதுவும் கூட சமீராவுக்கு புகைச்சலைக் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். தற்போது சமந்தா தனது புதிய படங்களை ஒப்புக் கொள்வதிலிருந்து, யாருடன் ஜோடி போடுவது என்பதிலிருந்து, எவ்வளவு சம்பளம் வாங்கலாம் என்பது வரை அனைத்துக்கும் கெளதம் மேனனிடம் ஆலோசனை கேட்பதாக தெலுங்குத் திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள். இப்படி சமந்தா ஒருபக்கம் படு வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாலும், வெடி போன்ற சூப்பர் டூப்பர் பிளாப் படங்களை தான் கொடுத்துக் கொண்டிருப்பதாலும் டென்ஷனாக இருக்கிறாராம் சமீரா. இந்த சண்டை எங்கு போய் முடியும், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் இரு மொழித் திரைத்துறையினரும் காத்துள்ளனர். |
Tuesday, 8 November 2011
கெளதம் மேனன் நாயகிகளின் கெளரவ மோதல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment