'அம்புலி' படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள
உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பூட்டை உடைத்து புன்னகையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
நுங்கம்பாக்கம் ஜம்புலிங்கம் தெருவில் அமைந்திருக்கும் இந்த இணையதள அலுவலகத்தை ஏக தடபுடலாக திறந்து வைத்திருக்கிறார் பிரபல தொழிலதிபரும் இதயம் நல்லெண்ணை உரிமையாளருமான வி.ஆர்.முத்து.
இதுவரைக்கும் சுமார் 30 ஆயிரம் உணவு முறைகளை வீடியோ, மற்றும் டெக்ஸ்ட் வடிவத்தில் தந்திருக்கும் இந்த இணைய தளம் விரைவில் மூன்று லட்சம் சமையல் குறிப்புகளை தருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறதாம். இந்த இணைய தளத்தின் ஆசிரியர் வி.சித்ரலேகா.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நெட்டுக்குள் இறங்கி ஒரு சொடுக்கு சொடுக்கினால் போதும். அந்த நாட்டு உணவு முறைகளை முறைப்படி கற்று சமையல் செய்துவிடலாம். அந்தளவுக்கு இந்த தளத்தை அமைத்திருக்கிறார்கள். அசைவம், சைவம், இவ்விரண்டையும் தவிர்த்து ஏராளமான உணவு வகைகளையும் கூட இந்த தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்றார் சித்ரலேகா.
No comments:
Post a Comment