ஒரு படத்தின் ஹிட், அப்படம் வெளியாகும் தியேட்டர்களின் முறுக்கு வியாபாரம்வரை நிர்ணயிக்கிறது. முறுக்கே இப்படியென்றால் மற்றவற்றை புரிந்து கொள்ள வேண்டியதுதான். இன்றைய தேதிக்கு ஹாட் கேக் இயக்குனர்களல் ஒருவராக இருக்கிறார் மைனா பட இயக்குனர் பிரபு சாலமன். தற்போது கும்கி படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்க, அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் ராமசாமியும் மிக மிக பிஸியாக செங்காடு என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் சிறப்புகளை டஜன் கணக்கில் அடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர். ஆனால் நாம் வியந்தது ஒன்றை பற்றிதான். அடிப்படையில் இவருக்கு சொந்த ஊர் மதுரை. மொத்த கோடம்பாக்கமும் மதுரையை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்க, இவர் சைலண்ட்டாக சினிமா யூனிட்டை அழைத்துக் கொண்டு தஞ்சாவூரில் டெண்ட் அடித்துவிட்டார். இதுவரை ஸ்டில் கேமிராவை கூட உருப்படியாக பார்த்திராத குக்கிராமங்களில் செங்காடு படத்தை எடுத்திருக்கிறாராம்.
ஒரு படத்திற்கு லொக்கேஷன் எவ்வளவு முக்கியம் என்பதை மைனா படத்தில்பார்த்திருப்பீர்கள். என்னுடைய படத்திலும் அதையேதான் மனதில் வைத்திருந்தேன். நான் நினைத்த கிராமம் தஞ்சாவூரை சுற்றி இருந்தது. அதனால்தான் அங்கு படப்பிடிப்பை வைத்தேன் என்றார் ரமேஷ் ராமசாமி.
இது என்ன மாதிரியான கதை?
இது நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் காதல் கதை. நண்பர்களுக்குள் துரோகம் நடந்தால் அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அழுத்தமான திரைக்கதையோடு இந்த படம் உருவாகியிருக்கிறது என்றார் டைரக்டர்.
ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், இந்த படத்தில் சண்டை இல்லையாம். ஐந்து தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த ரூபா என்ற பெண்தான் இப்படத்தின் நாயகி.
சென்ட்டிமென்ட்டாக 'ரூபா' சம்பாதிச்சு கொடும்மா ரூபா...
No comments:
Post a Comment