ஊசி முனையில் தேனைத் தடவி அதை நறுக்கென்று செலுத்துவதில் வல்லவர் பத்திரிகையாளர் பிஸ்மி. நேற்று நடந்த நடிகர் சூர்யாவின் பிரஸ்மீட்டில் அவரது கேள்வியும், சூர்யாவின் பதிலும் அட்ட'ஹாஸ்யம்....'
சூர்யா, நீங்க கதை கேட்டு முடித்ததும் அதை விஜய்யுடன் ஷேர் பண்ணிப்பீங்களா? முதலில் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத சூர்யாவும், 'அதுக்கு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்' என்று கூறிவிட்டு பிஸ்மியின் முகத்தையே பார்க்க, 'இல்ல... எதுக்கு கேட்கிறேன்னா நீங்க சைனா தீவிரவாதியோட மோதுறீங்க. அவரு பாகிஸ்தான் தீவிரவாதியோட மோதுறாரு. உங்க ரெண்டு பேராலயும் அண்டை நாடுகளில் பெரிய பிரச்சனையா இருக்கு' என்றாரே பார்க்கலாம். விழுந்து விழுந்து சிரித்தார் சூர்யா.
பொதுவாகவே பெரிய நடிகர்களின் பிரஸ்மீட்டில் அவசியமில்லாத கேள்விகளும் விழும். அதிகப்படியான எரிச்சலும் எழும். ஆனால் நேற்று நடந்த அந்த பிரஸ்மீட், இன்னொரு சூர்யா படம் பார்த்தது போல அத்தனை கச்சிதம்.
'மகேசன் தீர்ப்பையும் மதிக்கிறேன். மக்களின் தீர்ப்பையும் மதிக்கிறேன்' என்று சூர்யா பேசியதெல்லாம் தேர்ந்த அரசியல்வாதியின் ஸ்டைல். (அப்படியும் ஒரு ஐடியா இருக்கோ, என்னவோ?) ஏராளமான விஜய் கேள்விகளும் இடையிடையே செருகப்பட, அத்தனைக்கும் ஆனந்தப்பட்டார் சூர்யா.
7 ஆம் அறிவு படத்தை விஜய் பார்த்தாரா? இந்த கேள்விக்கு, 'இன்னும் இல்ல. ஆனா அவங்க மனைவி பார்த்தாங்க. நிறைய பாராட்டுனாங்க' என்றார் சூர்யா. நீங்க வேலாயுதம் பார்த்தீங்களா என்ற இன்னொரு கேள்விக்கு, 'இன்னும் 7 ஆம் அறிவு படத்தையே பார்த்து முடிக்கல நான். இனிமேல்தான் வேலாயுதம் பார்க்கணும். ஆனால் இரண்டு படங்களுமே நல்லா ஓடிட்டு இருக்கு. அப்படிதான் இருக்கணும். ஒரு படம் கமர்ஷியலா வந்தால், இன்னொரு படம் வேறொரு டைப்பில் வரணும்' என்று சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை அவிழ்த்துவிட்டார்.

No comments:
Post a Comment