தமன்னாவை சமீப காலமாக தமிழில் பார்க்கவே முடிவதில்லை. காரணம் கேட்டால், என்னென்னமோ கிசுக்கிறார்கள். காதல் தோல்வி என்பது அதில் முக்கியமான சமாச்சாரம். ஆனால் தமன்னாவிடம் கேட்டால் சிரிக்கிறார். காதல்... தோல்வி... ம்ஹூம்.. இதெல்லாம் படத்துல கூட எனக்கு கிடையாது. தெலுங்கில் இப்போ ஓஹோன்னு இருக்கேன். அதான் காரணம். நான் நடிச்ச ஒசரவல்லி, பத்ரிநாத் எல்லாம் சென்சேஷனலா போகுது. அதனால தெலுங்குல நிறைய கமிட் ஆகிட்டேன். தமிழ் ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்கவே என்னுடைய ஒரு தெலுங்குப் படம் சீக்கிரம் டப் ஆகி வரப் போகுது. ஆனால் இப்போதைக்கு நேரடி தமிழ்ப் படம் ஒண்ணும் இல்லை. நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால் திருப்தியா அமையல. அடுத்த வருஷம் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கத் திட்டமிருக்கு. பார்க்கலாம்," என்கிறார் சுவாரஸ்யமின்றி. தமிழ் மேல ஏன் இத்தனை அலுப்பு? அலுப்பெல்லாம் இல்ல. கடவுள் எனக்கு எழுதியது அப்படி. விதின்னு வச்சுக்குங்களேன்," என்கிறார் தத்துவமாய். என்னமோ மறைக்கிறீங்க போங்க...! |
Sunday, 6 November 2011
தெலுங்கில் இப்போ ஓஹோன்னு இருக்கேன்! - தமன்னா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment