இன்று கமல்ஹாசனுக்கு பிறந்த நாள். வாழ்நாள் சாதனையாளரான அவருக்கு நமது இணையதளம் சார்பில் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் கமல் பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டால் சந்தோஷமாக இருக்குமல்லவா? ச்சும்மா ஒரு ஜோக்குக்காகதான் இது...
அக்ரஹாரத்தில் வளர்ந்த திமிங்கலம் மாதிரிதான் கமல். பாரதியை போல எல்லாவிதிகளையும் மீறியவரல்லவா? அவருக்கு மீன் குழம்பு என்றால் அப்படி பிடிக்குமாம். அதிலும் நகைச்சுவை நடிகர் மயில்சாமி வீட்டில் செய்யும் மீன் குழம்புக்கு அடிமை. அடிக்கடி மயில்சாமியிடம் சொல்லி மீன் குழம்பு வரவழைப்பாராம்.
அவரும் கமல் கேட்டுவிட்டார் என்பதற்காக நல்ல மீனாக தேடி தேடி வாங்கி அதை தன் இல்லத்தரசியிடம் கொடுத்து சமைக்க சொல்வாராம். மண் சட்டியில் தயாராகும் இந்த மீன், அப்படியே சுட சுட கமல் ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
பல வருடங்களாக தொடரும் இந்த வழக்கம் இடையில் ஒரு நாள் ஜோக்காக முடிந்தது. வேறொன்றுமில்லை, கமல் மீன் குழம்பு கேட்ட தினத்தில் திருமதி மயில்சாமிக்கு உடல்நிலை சரியில்லை. மனைவியை கஷ்டப்படுத்தவும் கூடாது. கமல் மனசும் நோகக்கூடாது என்று கருதிய மயில், பொன்னுசாமி ஓட்டலில் மீன் குழம்பு வாங்கி, அதை தன் வீட்டு மண் சட்டிக்கு ஷிப்ட் பண்ணி, அதே சூட்டோடு கமலிடம் கொடுத்துவிட்டார்.
முதல் கவளத்தை பிசைந்து வாயில் வைத்த கமல், 'பொன்னுசாமி மீன் குழம்பு பிரமாதம்ப்பா...' என்று கூற, மயில்சாமி முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!
கமல்னா சும்மாவா?
No comments:
Post a Comment