மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday, 6 November 2011

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமீர்கான் இனைந்து நடிக்கின்றனர்


rajinikanth-and-amir-khan
நடிகர்கள் வெறும் படங்களில் மட்டுமல்லாது குறிப்பிடும் படியான சமுதாய சேவைகளிலும் ஈடுபடுகின்றனர். அப்படியொரு உன்னதமான பணிக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமீர்கான் இனைந்து பணிசெய்யவும், நடிக்கவும் உள்ளனர்.
இந்தியா எதிர்கொண்டு வரும் சவால்களில், ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் குழந்தைகளின் மரணமும் ஒன்று. இதனால் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பல்வேறு நோய்களில் சிக்கி, பாதிக்கப்பட்டு, இறக்கும் வாய்ப்புகளும் உள்ளது.
இதனால் குழந்தைகள், மற்றும் பெற்றோர்கள் மத்தியில், ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு முயற்சியாக, இதற்காக விளம்பரபடங்கள் தயாரிக்க உள்ளனர். இந்த விளம்பர படங்களில் நடிப்பதற்கும், விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட பிரசாரங்களிலும் ஈடுபடவும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமீர்கானை தேர்வு செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் மற்றும் அமீர்கான் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் ரஜினிகாந்த், அமீர்கானின் உருவப்படங்களுடன் கூடிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு சம்பந்தமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட உள்ளது. இது மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் கருத்தரங்குகள் மற்றும் பிரசாரக்கூட்டங்களிலும் ரஜினிகாந்த் மற்றும் அமீர்கான் பங்கேற்று பேச உள்ளனர்.
இன்னொரு குறிப்பிட வேண்டிய தகவல் என்னவென்றால், இதற்கு முன்னரே, ரஜினிகாந்த் போலியோ நோய்த் தடுப்பு விழிப்புணர்வு பிரசார விளம்பர படங்களில் நடித்திருந்தார்.

No comments:

Post a Comment