மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday, 11 November 2011

சொல்லால் அடித்த சுந்தரி... அதிர்ச்சியில் தயாரிப்பாளர்


கோடம்பாக்கத்தில் ஒரு குரூப்புக்கு மட்டும் 'சொல்லால் அடித்த சுந்தரி'யாக இருந்தார் சோனா. இப்போது சம்பந்தமே இல்லாமல் இன்னொருவரும் அவ்வாறு புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்த பிரச்சனையில் யார் ஐயோ பாவம் என்பதை பின் வரும் பாராக்களில் யூகிக்க...
வெங்கட்பிரபு மற்றும் அவரது தோழர்களுக்கு நெருங்கிய தோழியாக இருந்த சோனா,Sonaஅவர்களை நம்பி சில படங்களையும் தயாரித்தார். அது போதாதென்று வெங்கட் பிரபுவுக்கு ஒரு படத்தை இயக்கித்தர அட்வான்சும் கொடுத்தார். 'நிழல் சலனம்' என்பார்கள் சினிமாவை. வெங்கட்பிரபுவின் நட்பு வட்டத்தில் நிழலாகவே நடமாடிக் கொண்டிருந்த சோனாவின் மனசில் இப்போது சலனமும், சஞ்சலமும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. ஏன்?
எஸ்.பி.பி.சரண் மீது காவல் துறையில் பாலியல் புகார் கொடுத்தார் சோனா. அதை தொடர்ந்து சோனாவை தனியாக விட்டு விட்டு மற்றவர்கள் ஓரணியில் திரண்டார்கள். இனிமேல் சோனாவுக்கு படம் இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த வெங்கட்பிரபு சோனாவிடம் வாங்கிய அட்வான்சை திருப்பி தருவதாக உறுதியளித்தார். அதன் பின் வழக்கு வாபஸ் பெறப்பட்டு வெளிநாட்டுக்கும் சென்றுவிட்டார் சோனா.
ஆனால் சொன்னபடி வெங்கட்பிரபு முழு பணத்தையும் செட்டில் செய்யவில்லையாம். சூர்யா நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபுதான் இயக்கவிருக்கிறார். இந்த முறை சோனா வேறு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. நேராக ஞானவேல்ராஜாவையே தொடர்பு கொண்டாராம்.
ஒரு தயாரிப்பாளரோட கஷ்டம் இன்னொரு தயாரிப்பாளருக்கு தெரியும். எனக்கு தர வேண்டிய அட்வான்ஸ் தொகையை வட்டியோடு திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு உங்கள் படத்தை அப்புறம் ஆரம்பிங்க. இல்லையென்றால், நீங்கள் படத்தை ஆரம்பிக்கும் முன்பே நான் சங்கங்களில் புகார் செய்வேன். அது உங்களுக்குதான் கெட்ட பெயர். வெங்கட்டிடம் சொல்லுங்க என்றாராம்.
யாரோ நனைஞ்ச மழைக்கு. யார் யாரோ தும்ம வேண்டியிருக்கே!

No comments:

Post a Comment