மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday, 6 November 2011

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் பார்த்திபன் மகள்?


மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார். தனது அடுத்த படத்திற்கு நாயகியாக நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவை அவர் தேர்வு செய்துள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேச்சு நிலவுகிறது. கீர்த்தனா, சினிமா உலகிற்கு ஒன்றும் புதிதல்ல.

இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவன்-சிம்ரனின் மகளாக நடித்துள்ளார். கீர்த்தனாவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்த மணிரத்னம் தற்போது அவரை ஹீரோயினாகவும் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளார். மணிரத்னத்தின் இந்த புதிய படத்தில் ஹீரோயின் உறுதி செய்யப்படாத நிலையில் பிற நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மணிரத்னத்தின் புதிய பட ஹீரோயின் வாய்ப்பு கீர்த்தனாவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment