அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் இந்த படத்தை பற்றி வாய் கிழிய பேச்சும், வகை வகையான செய்திகளும் கோடம்பாக்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இயக்குனர் இமயம் இயக்குகிற படம் என்பதால்தான் இத்தனை எதிர்பார்ப்பும். வயல், வரப்பு, வாய்க்கால் என்று கிராமத்து ராஜாவாக இன்னும் எத்தனை காலம் வலம் வந்தாலும் அவரது பாணிக்கு அப்படியொரு வரவேற்பும் இருக்கிறது ரசிகர்களிடத்தில்.
ஆனால் சினிமாவிலிருக்கிற அத்தனை இயக்குனர்களும் போற்றி புகழும் இந்த இயக்குனர் இமயத்திற்கும், படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட பார்த்திபனுக்கும் என்ன பிரச்சனையோ?
இந்த படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார் பார்த்திபன். தனது ட்விட்டரில் இது குறித்து தெரிவித்திருக்கும் அவர், அதற்கான காரணத்தை மட்டும் சொல்லவே இல்லை. ஒரு வேளை சொல்ல முடியாதளவுக்கு 'சுருக்'கங்கள் இருக்குமோ என்னவோ?

No comments:
Post a Comment