தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகததால் நடிகை ஜெனிலியாவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜெனிலியா அதை கண்டுகொள்ளவில்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகர் சங்கம் உறுப்பினர் ஆகும்வரை தெலுங்கு படங்களில் நடிக்க ஜெனிலியாவுக்கு தடை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காரணத்திற்காக த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி, தமன்னா ஆகியோருக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ராணா டக்குபாதியுடன் ஜோடி சேர்ந்து நா இஷ்டம் என்ற படத்தில் ஜெனிலியா நடித்து வருகிறார். இந்த பட வேலைகள் முடிந்தவுடன் தடை அமலுக்கு வருகிறது. நம்மூரிலும் கூட நடிகர் சங்கம் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும் இதுவரை முன்னணி நடிகர், நடிகை யாரையும் அது தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
Wednesday, 9 November 2011
ஜெனிலியாவுக்கு டோலிவுட்டில் நடிக்க தடை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment