மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 5 October 2011

விரைவில் ராணா டகுபதியோடு பிபாஷா பாசு திருமணம்...!




Bipasha Basu-Rana Daggubati to marry soon
 ஜான் ஆபிரஹாம் உடனான காதலை முறித்து கொண்ட பிபாஷா பாசு, இப்போது ராணா டகுபதியோடு மிக நெருக்கமாக பழகி வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் நீண்ட நாள் காதலர்களாக இருந்து வந்தவர்கள் ஜான் ஆபிரஹாமும், பிபாஷா பாசும். இவர்கள் காதல் மீது யார் கண்பட்டதோ என்னவோ, சமீபத்தில் இவர்களது காதல் முறிந்தது.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகை பிபாஷா பாசு, நடிகர் ராணா டகுபதியுடன் மிகவும் நெருங்கி பழகி வருவதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதை நிரூபிக்கும் விதமாக சிலதினங்களுக்கு முன்னர் இந்தியா வந்த ஹாலிவுட் நடிகை, பாரிஸ் ஹில்டன் விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர். அதில் ராணா டகுபதியும், பிபாஷா பாசுவும் பங்கேற்றனர். இருவரும் இரவு விருந்து முழுக்க ஒரே ஆட்டம், பாட்டம் என்று அமர்களப்படுத்தினர். இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் நம்புபடியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
                                                        http://www.dinamalar.com

No comments:

Post a Comment