மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday, 7 October 2011

தமன்னா-அமலா சந்திப்பு


பொன் வைத்த இடத்தில் பூ வைத்த மாதிரி தமன்னா இடத்தில்தான் அமலாவை வைத்து அழகு பார்க்கிறது கோடம்பாக்கம். இந்த திடீர் அழகு புரட்சிக்கு அதிகAmala Paulகாரணம் தமன்னாவேதான். திடீரென்று தமிழிலிருந்து இடப்பெயர்ச்சி செய்து கொண்டார். வரிசையாக தெலுங்கு படங்களை கமிட் செய்து கொண்டு அங்கேயே தங்கியும் விட்டார்.
சாரலோ, துறலோ நனைந்தால் சரி என்ற நிலையிலிருக்கும் ரசிகன், அடுத்த மழைக்கு ஆசைப்பட்ட நேரத்தில்தான் வந்து சேர்ந்தார் அமலாவும். தெய்வ திருமகள் படத்தில் விக்ரம் வாய்ப்பு கொடுத்ததிலிருந்தே அவரது மார்க்கெட் மலேரியா உடம்புக்காரனின் தெர்மா மீட்டர் மாதிரி தாறுமாறான வேகம் காட்டியது. ரஜினியின் மகள் இயக்கும் படத்தையே வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளுகிற அளவுக்கு போய்விட்டது அவரது பாய்ச்சல்.
இந்த நேரத்தில்தான் தமன்னா இடத்தை அமலா நிரப்பிவிட்டதாக பேச்சும் பரவலாக எழுந்தது. சமீபத்தில் தமன்னாவை எங்கேயோ சந்தித்தாராம் அமலா. நான் சினிமாவுக்கு வந்தப்போ என்னையும் யாரோட இடத்தையோ நிரப்பிட்டாருன்னு எழுதினாங்க. இப்போ என் இடத்தை நீ நிரப்பியதாக எழுதறாங்க. சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்றாராம் அமலாவிடம்.
தத்துவம் நம்பர் ஒண்ணு?
                              http://www.tamilcinema.com
  

No comments:

Post a Comment