மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday, 4 October 2011

த்ரிஷாவை ரொம்ப பிடிக்கும் : விஷால்...!




Vishal happy about to act with tirsha
த்ரிஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். வெடி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்து நடிக்க இருக்கும் படம் சமரன். இப்படத்தை திரு இயக்குகிறார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். தற்போது சமரன் பட வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் விஷால், த்ரிஷாவுடன் நடிக்க போகும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

படத்தில் த்ரிஷாவுடன் நடிப்பது குறித்து விஷால் கூறுகையில், த்ரிஷாவுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. தாமிரபரணி படத்திலிருந்தே அவரிடம் கால்ஷீட் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. தற்போது சமரன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. த்ரிஷாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவருடன் படத்தில் தான் சேர்ந்து நடிக்கவில்லை, மற்றபடி அவர் எனக்கு ‌நீண்டகால நண்பர் என்று த்ரிஷா புகழ்பாடுகிறார் விஷால்.
                                                   http://www.dinamalar.com/
                                                      

No comments:

Post a Comment