மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday, 4 October 2011

ஹன்சிகா என் தோழிதான்... ஜெனிலியாவின் பெருமிதம்


ஒரு படத்தை ஒடவைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதற்குGenelia - Hansikaஇதைவிட பெரிய உதாரணத்தை தேட முடியாது. எதையாவது கிளப்பிவிட்டு அப்படத்தை பற்றி பேச வைக்கிற கொடுமை அநேகமாக தமிழ்சினிமாவில்தான் அதிகம். ஒரு குறிப்பிட்ட நட்சத்திர ஜோடிகளுக்கு இடையே நிஜமாகவே லவ் என்ற விஷயம் அந்த படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் வரும். இதை தயாரிப்பாளர்களோ, அல்லது அப்படத்தின் இயக்குனர்களோ, அவ்வளவு ஏன்? சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளோ கூட கிளப்பிவிடுவார்கள். இந்த விஷயம் பத்திரிகைகளில் சில வாரங்கள் செய்தியாகவும் கிசுகிசுவாகவும் நீடிக்கும். அதற்குள் படமும் கலெக்ஷனை ரொப்பிக் கொள்ளும். அப்புறம் எல்லாம் மறந்து அவரவர் வேலையை அவரவர் பார்ப்பார்கள்.
ஆனால் ஒவ்வொரு முறையும் இதில் ஏமாந்து போவது அப்பாவி ரசிகர்கள்தான். தற்போது மீடியாவில் அதிகம் அடிபட்டுக் கொண்டிருப்பது விஜய்யும் வேலாயுதமும்தான். ஆனால் இப்படத்தின் டைரக்டர் ஜெயம் ராஜா பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இப்படத்தில் நடித்திருக்கும் கதாநாயகிகளான ஜெனிலியாவுக்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் படப்பிடிப்பில் செம போட்டி. யார் நன்றாக நடிப்பது என்பது பற்றிதான் அந்த போட்டி என்றெல்லாம் கூறி பத்திரிகைகளில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இன்று அதுபற்றி பேசியிருக்கும் ஜெனிலியா சொன்ன விஷயங்கள் அத்தனையும் ஜெயம் ராஜாவின் பேட்டிக்கு எதிர்வினை. நானும் ஹன்சிகா மோத்வானியும் நல்ல பிரண்ட்ஸ். வேலாயுதம் படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். நான் நகரத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி எனக்கும் அவருக்கும் போட்டி என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறி ஒரேயடியாக கவிழ்த்துவிட்டார் ராஜாவை.
ஆமாம்னாலும் நியூஸ். இல்லைன்னாலும் நியூஸ். இதுதானே அவங்களுக்கும் வேணும்?

No comments:

Post a Comment