போகிற போக்கை பார்த்தால் ஒரே ஒரு படத்தை தவிர மற்ற படங்களுக்கு டூரிங் டாக்கீஸ்கள் கூட கிடைக்காது போலிருக்கிறது. கோடம்பாக்கத்தை ஒரேயடியாக அதிர வைத்திருக்கிறது 7 ஆம் அறிவு படத்தின் வியாபாரமும் அதற்கான வரவேற்பும்.
இதற்கு முன் வந்த தீபாவளிகளில் கூட பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளிவரும். அவற்றில் சில வெற்றியையும் சில அந்த வாய்ப்பையும் இழக்கும். ஆனால் இந்த முறை 7 ஆம் அறிவு முந்திக் கொண்டதால், மற்ற படங்களுக்கு லேசான மந்தநிலை நிலவுவதாக காதைக்கடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினாலும், தியேட்டர்காரர்கள்தான் சில விஷயங்களை தீர்மானிக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தியேட்டர் அட்வான்ஸ் என்ற கணிசமான தொகையைதான் சேர்த்து சேர்த்து ஒரு பெரும் தொகையாக உருவாக்கி தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு பெட்டியை எடுத்துச் செல்வார் விநியோகஸ்தர். இப்படி வழங்கப்படும் தியேட்டர் அட்வான்ஸ் தொகை ஒரே படத்தில் முடக்கப்பட்டிருப்பதுதான் பெரும் சிக்கலை உருவாக்கும் போலிருக்கிறது. இதோடு சேர்ந்து காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் நிலவ ஆரம்பித்திருப்பதால், வரும் என்று எதிர்பார்க்கப்படும் சில முக்கியமான படங்கள் கூட ஒரு வாரம் தள்ளி வெளியிடப்படும் நிலை ஏற்படலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், நான் ஒஸ்தியை கொண்டு வருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார் சிம்பு.
ஹ்ம்ம்ம் இளங்கன்று பயமறியாது!
No comments:
Post a Comment