சீமான் கதையின் நாயகனாகவும், முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் படம் "கண்டுபிடி கண்டுபிடி". மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவா என்ற இருபத்தியொரு வயதான இளைஞருடன் இணைந்து தயாரிக்கிறார் மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ். பிரபு சாலமனின் உதவியாளரான ராம் சுப்பாராமன் இயக்குகிறார். போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் "K2"வின் படப்பிடிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார். காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழமையான கிணறொன்றை கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள். நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணற்றோரமாகவே தவறி விழுந்தார். தலையில் அடிபட்டவர் மயக்க நிலைக்கு செல்ல, அந்த ஊரைச் சேர்ந்த ரெண்டு பேர் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து அவரை மீட்டு கரை சேர்த்தனர். அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது.. |
Friday, 7 October 2011
கிணற்றில் விழுந்த ஹீரோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment