காதே கிழிந்து போகிற அளவுக்கு ஊதப்படுகிற சங்கு சப்தத்தை தன் விரல் சிட்டிகையால் அடக்கிவிட்டார் ரஜினி. ராணா படம் டிராப். இனிமேல் வருவது கடினம் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, சைலன்ட்டாக ரா ஒன் படத்தில் நடித்துவிட்டு திரும்பிவிட்டார் ரஜினி.
நான் நடிக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதைதான் இப்படி குறிப்பிட்டாரோ என்னவோ?
ரஜினி ரா ஒன் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டார் என்பதையே ஷாரூக்கானின்ட்விட்டரை பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள் ரசிகர்கள். அவ்வளவு தெளிவாக இந்த சம்பவத்தை விவரித்திருக்கிறார் ஷாரூக் “குழப்பம், புரிதலின்மை, மன அழுத்தத்தில் தவித்த நேரத்தில் ரஜினி சார் செட்டுக்குள் வந்தார்… கடவுள் எதற்காக சினிமாவைப் படைத்தார் என்பதன் அர்த்தம் புரிந்தது… நன்றி சௌந்தர்யா… எங்கள் கனவை நனவாக்கிவிட்டார்,” என்று கூறியிருக்கும் அவர் தனது சந்தோஷத்தை அடுத்த ட்விட்டரிலும் இப்படி தொடர்கிறார்.
“ரா ஒன் முடிந்துவிட்டது. ரஜினி சார் ஆசீர்வதித்துவிட்டார். அவர் பெருந்தன்மையை நினைக்கும்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அவருக்காக எனது பிரார்த்தனைகள்.. அவரது குடும்பத்தினருக்கு எனது அன்பு. ரஜினி சார், எங்களை முழுமைப்படுத்திவிட்டீர்கள்!”
ரோபோ சிட்டியாக இந்த படத்தில் நடித்திருக்கிறாராம் அவர். சில மணி நேரங்களில் ஷுட்டிங்கை முடித்துவிட்டு தனக்கு ரஜினி கொடுத்த மரியாதையையும் காப்பாற்றியிருக்கிறார் ஷாரூக். படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ணினாலும் கலெக்ஷன் கொட்டும். ஏனென்றால் ரஜினியின் தோற்றம் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காகவாவது திரளுவார்கள் அல்லவா?
No comments:
Post a Comment