மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 5 October 2011

வீடுபுகுந்து தீபிகா படுகோனேயை எச்சரித்த போலீஸ்...!




Deepika Padukone throws a housewarming party
 மும்பையில் தான் வீடு வாங்கியதை கொண்டாடும் விதமாக, புதுவீட்டில் காதை செவிடாக்கும் வகையில் பாட்டு, கூத்து, கும்மாளம் என்று விடிய விடிய அந்த ஏரியாவை தூங்கவிடாமல் செய்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேயை போலீசார் விடுபுகுந்து எச்சரிக்கை செய்தனர்.

பாலிவுட்டின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் மும்பையில் பிரபாகதேவி ஏரியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் 26வது மாடியில் ஒரு பிளாட் வாங்கியிருக்கிறார். வீடுவாங்கியதை கொண்டாடும் விதமாக தமது நெருங்கிய நண்பர்கள், பாலிவுட் பிரபலங்கள் பலரையும் அழைத்து தமது புதுவீட்டில் விருந்து வைத்தார். இந்த விருந்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விருந்து நிகழ்ச்சியில் காதை பிளக்கும் வகையில் இசையும், அத்தோடு ஆட்டம், பாட்டம் என அந்த பிளாட்டே குலுங்கும் அளவுக்கு விருந்து நடந்தது. விடிய விடிய நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியால் அந்த பிளாட்டில் குடியிருந்த யாருமே நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதனால் அந்த பிளாட்டில் குடியிருப்பவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அதிகாலை 3.15 மணிக்கு ஒரு ஜீப்பில் வந்து போலீசார், தீபிகாவின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து எச்சரித்தனர். மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் கொண்டாடுங்கள் என்று அறிவுரை வழங்கினர். அடுத்த சிலநிமிடங்களில் இன்னொரு ஜீப்பில் வந்த போலீசாரும் தீபிகாவை எச்சரித்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து, விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மல்லையா, நடிகர்கள் இம்ரான் கான், அவரது மனைவி அவந்திகா, அபய் தியோல், ப்ரீத்தி தேசாய், அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், பிரியங்கா சோப்ரா, சித்தார்த் மல்லையா, ஷாஹித் கபூர், அனுஷ்கா சர்மா, ரிதீஷ் தேஷ்முக், ரன்வீர் சிங், ஜெனிலியா ஆகியோர் வெளியேறிவிட்டனர்.

தீபிகா வீட்டில் போலீஸ் புகுந்து எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அங்கு ஏராளமான பத்திரிக்கையாளுர்களும், புகைப்படக்காரர்களும் கூடிவிட்டனர். இதைப் பார்த்த போலீஸார் அந்த வழியாக வந்தால் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுப்பார்கள் என்று பயந்து வேறுவழியாக வெளியேறி விட்டனர். இப்படி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை நிம்மதியிழக்கச் செய்து, ஆட்டம் போட்ட தீபிகா உள்ளிட்டோருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸ் தரப்பில் ஒன்றும் தெரிவிக்கவில்லை.
                                                   http://www.dinamalar.com

No comments:

Post a Comment