மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 5 November 2011

நடிகை மனோரமாவுக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது


Manorama
நடிகை மனோரமா கடந்த மாதம் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள விருந்தினர் விடுதியிலுள்ள குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்ப்பட்டது.

இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாத காரணத்தால் அவரது மூளையில் ரத்தம் உறைந்தது. இதனையடுத்து அவரை
 தேனாம்பேட்டையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இதனை அடுத்து அவருக்கு நேற்று (1-11-11) மூளையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு அந்த ரத்த உறைவு நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை காலை 11 .15 மணியளவில் தொடங்கி 12 .30 மணி வரை நடந்தது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததிலிருந்து அவரது உடல்நலம் நன்றாக தேறிவருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்பக் கூடும் என தெரிகிறது. முன்னதாக நடிகர்கள் கமல்ஹாசன், செந்தில், மற்றும் அனுஷ்கா உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று அவரின் நலம் விசாரித்தனர்.
                                                                    www.filmics.com

No comments:

Post a Comment