மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday, 4 November 2011

படமாகும் மெரீனா கிளம்பப் போகும் பூகம்பம்


மெரீனா படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். இப்படத்தின் தலைப்பை பார்த்தாலே தெரியும், பீச்சும், பீச்சோரத்தில் நடக்கும் பித்தலாட்டங்களும்தான் கதையாக இருக்கும் என்று.
இப்படத்தில் பாண்டிராஜ் விசேஷமாக கருதுவது எதுவாகவும் இருக்கட்டும். திரையுலகத்தில் மற்றவர்களின் பார்வையே வேறு. மிக சிறிய ஸ்டில் கேமிரா ஒன்றை வைத்துதான் இந்தMarinaபடத்தை எடுத்திருக்கிறாராம் அவர். இதே மாதிரி செட்டப்போடுதான் வழக்கு எண் 19 என்ற படத்தையும் எடுத்து வருகிறார் பாலாஜி சக்திவேல்.
பெரிய கேமிரா முன் நின்றால்தான் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வரும் நடிகர்களுக்கு. தம்மாத்துண்டு கேமிராவை வைத்துக் கொண்டு படம் பிடித்தால் என்னாகும்? பல நடிகர்கள் முதலில் இந்த கேமிராவுக்கு முன் நின்று நடிக்க பழகவே நாட்களை எடுத்துக் கொண்டார்களாம். நல்லவேளையாக இருவரும் இவ்வித இடைஞ்சல்களை தாண்டி படத்தையும் முடித்துவிட்டார்கள்.

No comments:

Post a Comment