மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday, 4 November 2011

நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது ரூ 20 லட்சம் மோசடி புகார்

Jayaprakashரூ 20 லட்சம் மோசடி செய்ததாக பிரபல நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது அந்தோணிதாஸ் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

பசங்க, நான் மகான் அல்ல, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஜெயப்பிரகாஷ். இன்றைய தேதிக்கு நம்பர் ஒன் குணச்சித்திர நடிகர் இவர்தான்.

இவர் ஜி.ஜெ. பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அடையாறு இந்திரா நகர் சர்தார் பட்டேல் சாலையில் உள்ளது.

இந்த பங்கை லீசுக்கு விடுவதாக கூறி ஜெயபிரகாஷ் ரூ.20 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதில், "நடிகர் ஜெயபிரகாஷ் என்னை அணுகி தனது பெட்ரோல் பங்கை சரியாக நடத்த முடியவில்லை என்று கூறி, அதனை லீசுக்கு தருவதாக கூறினார். இதற்காக அவர் கேட்ட ரூ.20 லட்சத்தை நான் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்ன பெட்ரோல் பங்கை என்னிடம் ஒப்படைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது பற்றி நான் கேட்டபோது ரூ.5 லட்சத்துக்கு செக் கொடுத்தார். மீதிப் பணத்தை பின்னர் தருவதாக கூறினார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்து விட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, பணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறினார்.

மேலும் அரசியல் மற்றும் போலீசில் எனக்கு மேல்மட்ட தொடர்பு உள்ளது. உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இதைமீறி என்னிடத்தில் பணத்தை கேட்டால் மிரட்டல் விடுக்கிறார், கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டுகிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனு மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி, மிரட்டல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் ஜெயபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
                                                                 tamil.oneindia.in

No comments:

Post a Comment