கண்ணை மயக்கும் வெண்ணைக்கட்டி அனுஷ்காவுக்கு மார்க்கெட் மட்டும்சிமெண்ட்டையும் ஜல்லியையும் கலந்து செய்தது மாதிரி அத்தனை கெட்டி. சரிவேனா என்கிறது. இத்தனைக்கும் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த தெய்வ திருமகள் மண்ணை கவ்விய பிளாப். இருந்தாலும் அனுஷ்காவின் அழகுக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் பித்து பிடித்து திரிகிறார்கள் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.
கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரணிதா நடித்துக் கொண்டிருக்கிறார். அது போதாது என்று ஒரு காட்சியில் அனுஷ்கா நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சகுனி இயக்குனர். இதை ஏற்றுக் கொண்ட அனுஷ், விரைவில் அதற்கான கால்ஷீட்டை ஒதுக்கவிருக்கிறார்.
No comments:
Post a Comment