அசத்தப்போவது யாரு? கலக்கப்போவது யாரு? என்று ஏற்கனவே இரு நிகழ்ச்சிகள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகிறது. அதே பாணியில் மற்றுமொரு நிகழ்ச்சி போல என நினைத்தால் அது தான் இல்லை என்கிறது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி "ஜெயிக்கப் போவது யாரு?... பல்வேறு திறமைகளை கொண்டுள்ள திறமைசாலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கச்செய்வது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது எனலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலவித திறமையானகலைஞர்கள், திகிலூட்டும் ஆச்சரியங்களை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள். உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரும் வித்தி யாசமான திறமை இருந்தால் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சியை நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார். நடுவர்களாக பலவித கலைகளின் ஆசான் ஹுசைனி, நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை சந்தியா(எதுக்கு...?) ஆகிய மூவரும் இணைந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்கின்றனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுவரையான தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் தான் மார்க் போடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுரேஸ் தம் பங்குக்கு மார்க் போடுவார். திறமையை வளர்த்தால் சரி....!!!www.tamilcinema.com |
Sunday, 30 October 2011
ஜெயா டிவியின் ஜெயிக்கப்போவது யாரு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment