வெளுத்துக்கட்டு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அருந்ததி. தெரிந்தோதெரியாமலோ நட்சத்திரத்தின் பெயரையே இவருக்கு வைத்திருக்கிறார்கள். பெயருக்கேற்ப ஜொலிக்க வேண்டிய பொண்ணு, விளக்கெண்ணை தடவிய வெண்ணிலா போலானார். ஏன்? எல்லாமே சொந்தமாய் வைத்துக் கொண்ட சூனியம்தான்.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம்தான் வெளுத்துக்கட்டு. அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த விஜய்யே இவரை பாராட்டுகிற அளவுக்கு தமிழும் பேசி, அழகிலும் அசத்தினார். ஆனால் அப்படத்தின் ரிசல்ட் அருந்ததியை பாதித்ததாக தெரியவில்லை. மீண்டும் கலிங்கத்து பரணி என்றொரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ஐந்து கோவிலான்தான் அப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று படப்பிடிப்பிலிருந்து மாயாமாய் மறைந்தார் அருந்ததி. அப்புறம் ஏற்பட்ட கசாமுசாவினால் படமே நின்று போனது.
No comments:
Post a Comment