மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday, 15 November 2011

சோனாவின் போன் சோகத்தில் தமிழ்சினிமா

குதிரை இளைச்சாலும் குதிரைதான். அதற்காக அதை ஆட்டுக்குட்டி ரேஞ்சுக்கு ட்ரீட் Sonaபண்ணுவதுதான் அநியாயமாக இருக்கிறது. தமிழ்சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு தயாரிப்பாளராக தன்னை உயர்த்திக் கொண்ட நடிகை சோனா, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை உணர்ந்து கொள்வதற்குள் கையிலிருந்த அத்தனை துட்டும் காலி.
மறுபடியும் அவர் எழுந்து நிற்க வேண்டும் என்றால், முன்பு போல ஆடி பாடினால்தான் உண்டு என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த சோனா, தனக்கு தெரிந்த டான்ஸ் மாஸ்டர்களும் இயக்குனர்களுக்கும் ஒரு போன் அடித்தாராம். உங்க படத்தில் ஸேலோ டான்ஸ் ஆடுற மாதிரி வாய்ப்பு வந்தா சொல்லுங்க. நான் ஆடிக் கொடுக்கிறேன் என்றாராம். அதற்காக அவர் கேட்ட சம்பளத்தை வெளியே சொல்லவே அஞ்சுகிறார்கள் மேற்படி தோழர்கள்.
சோனாவோட கஷ்டம் பெரிசுதான். அதுக்காக அதே அளவுக்கு சம்பளத்தையும் கேட்டா என்ன செய்யுறது? ஒரு பாட்டுக்கு மூணு லட்சமோ, நாலு லட்சமோ வாங்க தயார்னு சொன்னா ரெகமண்ட் பண்ணலாம் என்கிறார்கள்.
மலை சாய்ந்து போனாலும் சிலையாகலாம் பெண்ணே, டோண்ட் வொர்ரி...

No comments:

Post a Comment