யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள். இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எப்போது அது நிறைவேறும் என்று தெரியவில்லை.
எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன். இவ்வாறு செல்வராகவன் கூறினார்.
No comments:
Post a Comment