விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜயக்கு அடுத்து அதிக சம்பளம் முருகதாஸுக்குதான்.
பணம் சம்பாதிக்கிறது நோக்கமே இல்லை. எவ்வளவு சம்பாதிச்சாலும் காலையில் டிபனுக்கு நாலு இட்லிக்கு மேல சாப்பிட முடியாது என்று சிக்கன பிலாஸபி நடத்தியவர் முருகதாஸ். பேச்சைப் போலவே சம்பளமாக சில லட்சம் போதும் என்று ஒதுங்கிக் கொள்வார் போலிருக்கிறது என்று நினைத்தால் போச்சு. மனிதரின் சம்பளம் பத்து கோடியை எப்போதோ தாண்டிவிட்டது.
விஜய்யை வைத்து இயக்கும் படத்துக்கு பன்னிரெண்டு கோடி கேட்டு, கொஞ்சம் அதிகமாச்சே என்று யோசித்ததுக்கே கோபித்துக் கொண்டு போனவர்தான் நமது முருகதாஸ்.
சாப்பிடுறது நாலு இட்லினாலும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட பணம் நிறைய செலவாகுமே.
No comments:
Post a Comment