அஷ்டவதானி டி.ராஜேந்தருக்கு அஸ்ட்ராலஜியும் தெரியும். ஜோதிடத்தை கரைத்துகுடித்த அவரே போடா போடி படத்தின் துவக்க விழாவுக்கு நல்ல நேரம் குறிக்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. இந்த படத்தில் நடிக்க துவங்கிய பின்பு சிம்பு நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் போடா போடி மட்டும் பொடி டப்பாவுக்குள் உறங்கிய தும்மல் மாதிரி அடங்கியே கிடக்கிறது.
எப்போது படப்பிடிப்பை துவங்கினாலும், எப்படா நிறுத்துவோம் என்ற மன நிலையோடுதான் புளோருக்குள் காலையே வைக்கிறார் சிம்பு. பல மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கட் கிழமை இப்படத்தின் ஷுட்டிங் துவங்கியது. லைட்டிங் பண்ணிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த சிம்பு, அடுத்த சில நிமிடங்களில் வயிற்றை பிடித்துக் கொண்டு ஐயோ வலிக்குதே என்றாராம்.
இப்படி திடீர் வயிற்று வலி எப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் ஏற்படுகிறதோ, அதற்கு காரணம் வயிரல்ல, வேறொன்று என்பது சினிமாக்காரர்களுக்கு தெரியாததல்ல. இருந்தாலும், ஐயோ... சார். முதல்ல உடம்பை பாருங்க என்று வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம். (அப்புறம் மூலையில் உட்கார்ந்து மூக்கு சிந்தியிருப்பார்கள்)
வீட்டுக்கு போன சிம்பு, ரெண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். வயிற்று வலி எப்படி குணமானது என்பதை இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment