கமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார் என்றால் அந்த ஏரியாவிலேயே ஒரு அமைதி தொற்றிக் கொள்ளும். அவசியப்பட்டாலொழிய குரல் எழுப்ப மாட்டார்கள் டெக்னீஷியன்கள். ஒரு மாபெரும் கலைஞனுக்கு தரப்படும் மரியாதைதான் அது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் அறிவாலயத்தில் சிக்கிக் கொண்ட அவஸ்தையை பிரஸ்மீட்டில் அனுபவித்து விடுவார்கள் சில முக்கியஸ்தர்கள். அப்படிதான் ஆனது கலையுலகத்தின் மூத்த நடிகரான கமல் நிலைமையும். ஆனால் இந்த கேள்வி அவசியமில்லையே என்று சம்பந்தப்பட்ட நிருபரையே காய்ச்சி எடுத்தார்கள் சக நிருபர்கள். அப்படியென்ன நடந்தது அங்கே?
ஃபிக்கி என்ற அமைப்பின் சார்பாக நடத்தப்படும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டுக்கான பிரஸ்மீட் அது. இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு தகவல்களை பேசி முடித்த கமல், நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள தயாரானார். அந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத விதத்தில் பறந்து வந்தது அந்த கேள்வி. இப்படி கேட்டவரும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பதுதான் பேரதிர்ச்சி.
‘கமல் நீங்க. ரஜினி, அமிதாப் மூன்று பேரும் ஏன் நடிப்பதை நிறுத்திக்கொள்ளக் கூடாது?’ என்றார் கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல். சட்டென்று ஒரு வினாடி நேர அமைதி அத்தனை பேரின் மென்னியையும் பற்றி இறுக்க, சுதாரித்துக் கொண்டார் கமல். நீங்க எழுதறதை நிறுத்திட்டீங்கன்னா நானும் நடிப்பதை நிறுத்திடுவேன். ரெண்டு பேரும் டீக்கடையில் உட்கார்ந்து பொழுதை போக்கலாம் என்று கூறிவிட்டு அடுத்த கேள்வியை எதிர்நோக்கும் ஆர்வத்தோடு வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அப்படியிருந்தும் விடாத நிருபர் இல்லல்ல... ஏன் கேட்கிறேன்னா... என்று கேள்வியை தொடர, அண்ணே. நீங்க எதுவும் இப்ப பேச வேணாம். பிரஸ்மீட் முடிஞ்சதும் பேசிக் கொள்ளலாம் என்றார் கமல்.
ஊரே வணங்குகிற நடராஜர் சிலை கூட, சில நேரங்களில் லாரி டிக்கியில் வைத்து கடத்தப்படும் சோகத்தை அறியாதவரா ‘தசாவதார’ கமல்?
www.tamilcinema.com

No comments:
Post a Comment