ஒரு படம் வெளிவருதற்கு முன்பே ரசிகர்களின் மனசில் துள்ளாட்டம் போட வைப்பது அத்தனை சுலபமல்ல. அதை சரியாக செய்து வருகிறது ஒரு நடிகையின் வாக்குமூலம். இந்த படத்தில் நடிகைகளின் இன்னொரு பக்கத்தை அப்பட்டமாக சொல்வார்களோ என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த படம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார் நடிகை ரோஹிணி.
தமிழ்சினிமாவில் வெறும் நடிகை என்ற எல்லையை தாண்டி, அறிவாளியாகவும் வாசிப்பாளராகவும் அறியப்படுகிறவர் ரோஹிணி. இவரைதான் இந்த படத்தின் பாடல்களை வெளியிட அழைக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டார்களாம் படக்குழுவினர்.
ஆனால் இவர்களின் ஆசையை நிராசையாக்கிவிட்டார் ரோஹிணி. பொதுவாக ஒரு நடிகையை பற்றி தவறாக எழுதுவதையும் பேசுவதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த படம் கூட அப்படிப்பட்ட கருத்தை கொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதனால் இந்த விழாவுக்கு என்னால் வர இயலாது என்றாராம்.
No comments:
Post a Comment