சில காலம் ஆகிவிட்டது நமீதாவை பார்த்து. தெலுங்கு, போஜ்பூரி, கன்னடம் என்று வேற்று மொழி ஏரியாவில் வெயிட் காட்டிக் கொண்டிருக்கிறாராம். அதனால்தான் இந்தஆப்சென்ட். ஆனால் சில தினங்களுக்கு முன் நடந்த கொள்ளைக்காரன் ஆடியோ விழாவில் அதிசயமாக பார்க்க முடிந்தது அவரை. அதே வெயிட், அங்குலம் கூட ஏறாத சதைப்பற்று என்று நமீதாவின் கட்டுமஸ்தான கவர்ச்சி எப்போதும் போலவே வெளிப்பட்டது.
‘தெய்வமே வரம் கொடு’ என்பதை போல ரசிகர்கள் அவரை விரட்டி விரட்டி ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நமீதாவை பார்த்ததும்தான் நமக்கும் அந்த ரெஸ்ட்ராரெண்ட் நினைவு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நம்பை அழைத்த சப்-வே என்ற ரெஸ்ட்ராரெண்ட்டின் முதலாளி விபின் சத்சேவ் ‘நமீதா மேடம் நம்ம ரெஸ்ட்ரெண்ட் டிஷ் என்றால் இன்னும் ரெண்டு பீஸ் சேர்த்து சாப்பிடுவாங்க. அதுக்கு காரணம் ருசி மட்டுமல்ல, இங்கு கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சியைதான் கொடுக்கிறோம்’ என்றார். இதே ரெஸ்ட்ராரெண்ட்டில் ஏகப்பட்ட நமீதாக்கள் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிந்தது. வாயை கட்டவும் முடியாமல், கொழுப்பை சகிக்கவும் முடியாமல் தவிக்கும் அநேக அழகிகளுக்கு சொர்க்கமாக திகழ்வது இந்த சப்-வேதான் என்பதை சொல்லாமல் சொல்லியது அந்த கலக்கல் ஏரியா.
அவ்வப்போது இவர்களுக்கு போன் அடித்து, சிக்கன் ஐட்டங்களை வரவழைத்து உள்ளே தள்ளும் நமீதா, எல்லா பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிடுவது தனக்கு சிக்கன் ரொம்ப பிடிககும் என்பதைதான்.
அடடே, ஒரு சிக்கனே சிக்கனை சாப்பிடுகிறதே. (மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும்)
No comments:
Post a Comment