இந்தக் கதையும், இந்தப் படத்தின் டைட்டிலும் உருவாகக் காரணம், சிறுவயத்தில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்தான். அவைதான் என்னுள் சினிமா இயக்கவேண்டும் என்ற கனவை விதைத்தவை என்று சொன்ன மிஷ்கினுக்கு இது மிஷ்கினின் கனவுப் படம் என்கிறார்கள்.
ஜீவா – மிஸ் யுனிவர்ஸ் பைனலிஸ்ட் பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு உண்மையான முதல் சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது என்கிறார் படத்தை தயாரிக்கும் யூடிவின் தென்னிந்திய நிர்வாகி தனஞ்செயன்.
தொடக்க விழா அன்றே படப்பிடிப்பை தொடங்கிய மிஷ்கின், முதல் கட்ட படபிடிப்பில் பிரமாண்ட குங்பூ போட்டியை படமாக்கிக் கொண்டிருந்தார். ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். ஷங்கர் முருகதாஸ் போல ஹாலிவுட்டில் ஆள் பிடிக்காமல் ஆக்ஷன் காட்சிகளுகான குங்பூ சண்டைகளை வடிவமைக்க சென்னையை சேர்ந்த குங்பூ மாஸ்டர் சேகரையும் (இவரிடம் மிஷ்கினும் குங்பூ கற்றுக்கொண்டாராம்) திலிப் சுப்ராயணையும் ஆக்ஷன் டைரக்டர்களாக நியமித்துள்ளார்.
நரேன் வில்லனாகவும் நாசர் போலீஸ் அதிகாரியாகவும் முன்னாள் ஹீரோ செல்வா, ஜீவாவின் குங்பூ மாஸ்டராகவும் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஆடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக இருக்கிறது.
No comments:
Post a Comment