மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday, 11 December 2011

மகேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை!

முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வீட்டில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். பிரபல தெலுங்கு நடிகர் - தயாரிப்பாளர் கிருஷ்ணாவின் மகனுமான மகேஷ்பாபுவின் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த 'திடீர்' சோதனை நடந்தது. 

மகேஷ்பாபு இப்போது நடித்துவரும் தி பிஸினஸ்மேன் படத்தின் தயாரிப்பாளர் வீடுகள், பட அலுவலகம் என பல இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. மகேஷ்பாபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சோதனையின் போது, மகேஷ்பாபு, ஒரு படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்து, அவர் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். தெலுங்கு சினிமாவில் மிக அதிகமான சம்பளம் பெறுபவர் மகேஷ்பாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment