ஒஸ்தி ஃபீவரிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவிட்டார் சிம்பு. ஆனால் அவரைவைத்து படம் எடுக்கும் அடுத்தப்பட தயாரிப்பாளர்கள் மீண்டார்களா என்றால் அதுதான் இல்லை. இவரை வைத்து வேட்டை மன்னன் படத்தை தயாரித்து வரும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுவிட்டாராம் இப்போது.
ஒஸ்தி ரிலீஸ் நேரத்தில் தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எல்லாரும் முந்தைய கடன் பாக்கிக்காக டி.ஆரை நெருக்கியதை கண் கூடாக கவனித்த சக்கரவர்த்தி, முதல் ஷெட்யூல் படப்பிடிப்புக்கு பிறகு ரெண்டாவது ஷெட்யூல் பற்றி யோசிக்கணும் என்றாராம் சிம்புவிடம். இதுவரைக்கும் இவ்வளவு செலவு பண்ணியிருக்கேன். இந்த படத்திற்கு இன்னும் செலவு செய்து முடிக்கும்போது முந்தைய கடன் பாக்கியை கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் பண்ண விடுவேன்னு பிரச்சனை பண்ணினால் என்னால் முடியாது. இப்பவே எல்லா தியேட்டர்காரர்களையும், விநியோகஸ்தர்களையும் அழைத்து பேசி சரியாக வந்தால்தான் அடுத்த ஷெட்யூல் என்று கூறிவிட்டாராம்.
அதுமட்டுமல்ல, சிம்புவை இயக்கிக் கொண்டிருக்கும் வேட்டை மன்னன் இயக்குனர் நெல்சனிடம் இன்னும் எத்தனை நாட்கள் ஷுட்டிங் நடக்கும்? சிம்பு ஒரு நாள் கூட டேட்ஸ் வேஸ்ட் பண்ணாமல் வருவாரா என்றெல்லாம் நச்சரித்துவிட்டாராம்.
புத்துக்குள் கைய விடுறதா முடிவு பண்ணிட்டாரு. க்ளவுஸ் போட்டுக்கறது தப்பில்லையே?
No comments:
Post a Comment