மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Monday, 17 October 2011

தொடர் பிளாப்ஸ்... கவலையில் தமன்னா


தமிழில் திடீர் வெற்றிடமாகிப் போனது தமன்னாவின் வாய்ப்பு. இது திட்டமிட்ட சதிTamannaஎன்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அவருக்கு நெருக்கமான நடிகர் ஒருவருக்கு திடீர் திருமண ஏற்பாடு நடந்தது. இந்த நேரத்தில் தமன்னா சென்னையில் இருந்தால் அது நல்லதல்ல என்று கருதிய நடிகரின் குடும்பம் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் பார்த்துக் கொண்டதாக கிசுகிசுத்தார்கள் கோடம்பாக்கத்தில்.
தன் அழகிய காதலை கரையான் அரித்துவிட்டதே என்று கவலைப்பட்ட தமன்னா, அப்படியே தெலுங்கு ஏரியாவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது கூட ஒரு தெலுங்கு படத்திற்காக சுவிஸ் போயிருக்கிறார். இந்த ட்ரிப் சுமார் ஒரு மாத காலமாம்.
புரையோடிப் போன நெஞ்சுக்கு இப்படியெல்லாம் மருந்து போட்டுக் கொண்டிருக்கும் அவருக்கு மேலும் மேலும் சிக்கல். இவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த சமீபத்திய படங்கள் எல்லாமே ப்ளாப் ஆகிக் கொண்டிருக்கிறதாம். இப்போது கூட தமன்னாவும், ஜுனியர் என்.டி.ஆரும் நடித்த ஓசரவள்ளி என்ற படம் பிளாப் என்கிறார்கள்.
இப்படியே போனால் தெலுங்கும் கைவிட்டுவிடும் சூழலில் இருக்கிறது அவரது மார்க்கெட்.
                                  www.tamilcinema.com

No comments:

Post a Comment