இந்திக்கு போகிற ஆசையில், முன்பே ஒப்பந்தம் போட்டிருந்த தெலுங்கு படத்தை கேன்சல் செய்துவிட்டார் ஸ்ருதிஹாசன் என்று எழுதியிருந்தோம். தம்மு என்ற படத்தில் ஜுனியர் என்.டி.ஆருடன் நடிக்கவிருந்த படத்திலிருந்துதான் இந்த திடீர் வழுக்கல்.
ஜுனியர் என்.டி.ஆர் என்ன நம்ம ஊர் பவர் ஸ்டாரா, அடுத்த ஹீரோயினை தேடிஅனல் காய்ந்து போவதற்கு? பொன் வைக்கிற இடத்தில் வைரத்தையே வைத்து அழகு பார்க்கிறாராம் இப்போது.
தெலுங்கு திரைப்பட வரலாற்றிலேயே அதிக கலெக்ஷனை வாரிக்குவித்த மஹதீரா படத்தின் நாயகியான காஜல் அகர்வாலை புக் பண்ணிவிட்டாராம். ஸ்ருதி விலகிய செய்தியை அறிந்ததுமே தமன்னா, த்ரிஷா என்று ஒரு பெரும் அழகிகள் கூட்டமே இந்த இடத்தை லபக்க ஆசைப்பட்டார்களாம். யாரும் வேண்டாம். காஜல் ஃபிரியா இருக்காங்களா கேளுங்க என்று மேனேஜர்களுக்கு உத்தரவு போட்டாராம் ஜுனியர் என்டிஆர்.
இந்திப் படப்பிடிப்பில் இருக்கும் காஜல், இந்த அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம். ஆனால் சம்பளத்தை குறைத்தார் என்று மட்டும் நினைக்காதீர்கள். இது அர்ஜன்ட் அழைப்பு அல்லவா? அதற்காக கொஞ்சம் கூடுதலாகதான் வாங்கிக் கொண்டாராம்.
www.tamilcinema.com
No comments:
Post a Comment