எவ்வளவு பெரிய படத்தை உருவாக்கினாலும், ஆஹா இதை விட்டுட்டோமே என்றுகுறை காண்பதுதான் பொல்லாத மனசின் புரியாத லீலையாக இருக்கும். முதல் பிரதி எடுக்கிற வரைக்கும் அதை திருத்திக் கொண்டே இருக்கிற இயக்குனர்களும் இருக்கிறார்கள். ஹீரோக்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் வேலாயுதம் படத்தை பார்த்து விட்டு முழு திருப்தி என்றாராம் விஜய்.
இந்த கதையை கேட்கும் போது மனதில் என்ன நினைத்திருந்தாரோ, அதை ஸ்கிரீனில் கொண்டு வந்திருப்பதாக டைரக்டர் ராஜாவை பாராட்டுகிற அளவுக்கு இந்த படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறாராம் அவர். அதற்கு உதாரணமாக எதை சொல்லலாம்?
படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அத்தனை பேரையும் நேரில் அழைத்த விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அத்தனை பேரும் தங்க சங்கிலியும், தங்க மோதிரமும் பரிசளித்தாராம். பொதுவாக படம் முடியும்போது படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு வாட்ச், பேண்ட் சட்டை என்று வாங்கிக் கொடுப்பார்கள் ஹீரோக்கள். ஆனால் இந்த முறை தங்க சங்கிலி எனும்போதே அவரது திருப்தி வெளிப்பட்டு விட்டதாக கிசுகிசுக்கிறது இன்டஸ்ட்ரி.
அதுபோகட்டும்... படத்தை தமிழகம் முழுக்க சொந்தமாகவே ரிலீஸ் செய்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
www.tamilcinema.com
No comments:
Post a Comment