தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஐம்பதுக்கும் குறைவான ஓட்டுக்களே வாங்கியிருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். இந்த பவர் ஸ்டாரின் ஃபியூஸ் பிடுங்கப்பட்டிருந்தாலும், தனது சிரித்த முகத்தை அவர் சோகமாக்கி கொள்ளவே இல்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த தோல்வி எனக்கு தெரிந்ததுதான். இருந்தாலும் இது ஒரு அற்புதமான தேர்தல் அனுபவமாச்சே என்கிறாராம் சகாக்களிடம். அதற்கும் காரணம் இருக்கிறது. சுமார் இருபது நாட்களாக பம்பரமாக சுற்றி பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து ஓட்டு வேட்டை நடத்தி வந்தார் இவர்.
சரி போகட்டும்... பவருக்கே ஷாக் கொடுத்த நியூஸ் இன்னொன்று...
நித்யா மேனனிடம் கால்ஷீட் கேட்டராம் இவர். கோடம்பாக்கமே கூடி நின்று கும்மியடிக்கும் மேட்டர் இதுதான். கேரளாவில் நித்யா மேனனுக்கு ரெட் போட்டிருக்கிறார்கள். எந்த தயாரிப்பாளரும் இவரை புக் பண்ணக் கூடாது என்பது கேரளாவின் கிடுக்கிப்பிடி. அதிர்ச்சியில் இருக்கும் நித்யா மேனனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் நம்ம பவர் ஸ்டார்.
நான் ஹீரோவா நடிக்கிற ஒரு படத்தில் என்னுடன் ஜோடியா நடிக்க தயாரா? அப்படி தயார் என்றால் ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்றாராம். ஐம்பதே தாண்டாத நித்யா, ஒரு கோடி என்றதும் ஒரேயடியாக தாண்டிக்குதித்து வந்துவிடுவார் என்பது அவரது கால்குலேஷன். அதுமட்டுமல்ல, இப்போது அவருக்கு தொழில் தடை வேறு இருக்கிறதே? அதனால்தான் இந்த அழைப்பு.
இதற்கு அவர் என்ன பதில் சொன்னாராம்?
சீனியர் சிட்டிசனுடன் நடிப்பதில்லை.... இதுதான் நித்யாவின் நெருப்பள்ளிக் கொட்டும் பதில்.
No comments:
Post a Comment