உதறலை டான்ஸ் என்றும் சொல்வார்கள் தமிழர்கள். அப்படிதான் பிரபுதேவாவின் மசாலாவை கமர்ஷியல் என்று கொண்டாடினார்கள். ஆனால் போக்கிரிக்கு பிறகு அவரது திறமைக்கு ஃபெயில் மார்க் மட்டுமே கொடுத்து தங்கள் ரசனையை அழுக்கு படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதே ரசிகர்கள்.
சமீபத்தில்தான் வெளிவந்தது எங்கேயும் காதல். ஆனால் மாஸ்டரின் நடனம்ஒன்றுதான் அதில் பேசப்பட்டது. ஜெயம் ரவியோ, ஹன்சிகா மோத்வானியோ ஜனங்களின் மனசில் சிறு சலசலப்பை கூட ஏற்படுத்தவில்லை. படமும் அப்படியே. இந்த சோகத்தை அப்படியே பின்பற்றியிருக்கிறது மாஸ்டரால் இயக்கப்பட்டு வெளிவந்திருக்கும் மற்றொரு படமான வெடியும்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் இடத்திற்காக பிரபுதேவா வருந்தினாரோ, இல்லையோ? விஷால் வருந்தியிருக்கிறார். யாரும் சொல்லாமலேயே தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். திரு இயக்கத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் சமரன் படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்திலிருந்து சுமார் ஒன்றரை கோடியை குறைத்துக் கொண்டாராம். தானே முன் வந்து இப்படி ஒரு முடிவெடுத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தோல்விப்பட ஹீரோக்களே, கொஞ்சம் விஷாலை பின்பற்றுங்கள்...
No comments:
Post a Comment