மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 12 October 2011

ரஜினி பட ரீமேக்கில் நானா? ஷாருக்கான் திகைப்பு...


ஷாரூக்கானின் ரா ஒன் படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த விழாவுக்கு ரஜினி வருவார் என்று ’கிளப்பி’ விட்டிருந்தார்கள். அதற்காகவும் எள் போட்டால் ஆயிலாகிவிடுகிற அளவுக்கு கூடியிருந்தார்கள் ரசிகர்கள்.
இந்த விழாவை ரஜினியின் புகழ்பாடும் மேடையாக அவர் மாற்றிக் கொண்டதில்Sharukh Khan - Rajinikanthஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் எந்தளவுக்கு ரஜினியை நேசிக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நமது அன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்த நாட்டுக்குப் போனாலும் ரஜினியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவரோடு நடிக்க இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. சிறு வயதில் அவர் படப்பிடிப்புகளை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முகுல் ஆனந்தின் ஹம் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று தூரத்திலிருந்து ஏங்கியவன் நான். அன்று அவரை பிரமித்துப் பார்த்தவன், இன்று அவரோடு ரா ஒன்னில் நடித்ததை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன் என்றார் ஷாருக்கான்.
ரஜினி படத்தை ரீமேக் செய்து என்னால் மட்டுமல்ல, யாராலும் அது முடியாது. ரஜினி ரஜினிதான். அவரைப்போல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது. என்னைப் போன்ற நடிகர்கள் அவரைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர, அவராகவே நடிக்க முயற்சிக்கக் கூடாது.
ரஜினி படங்களின் ரீமேக்கில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் அவர் மட்டுமே நடிக்க முடியும் என்றவர் விழா முடிந்ததும் ரஜினியை சந்திக்க கிளம்பியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
                            www.tamilcinema.com

No comments:

Post a Comment