மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 12 October 2011

முகமூடியில் தழுவல்... முரண்படும் சிஈஓ?


தெய்வ திருமகள், முரண் என்று இரு படங்களை வெளியிட்டிருக்கும் யூடிவிMyshkinநிறுவனம் இப்போது மிஷ்கின் இயக்கி வரும் முகமூடி என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. முதல் இரு படங்களும் ஆங்கில படங்களின் தழுவல் என்பதை அப்படங்களின் இயக்குனர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். இந்த முகமூடி மட்டும் பரிசுத்த ஆவியில் வேக வைத்த ஸ்கிரிப்டாகவா இருக்கப் போகிறது என்று முணுமுணுத்தார்கள் கோடம்பாக்கத்தில்.
இந்த முணுமுணுப்பை நியாயப்படுத்துகிற மாதிரிதான் இருக்கிறதாம் துவக்கம். இதில் இடம் பெறும் சில காட்சிகள் சில ஆங்கில படங்களை நினைவுபடுத்துவது போல இருப்பதால் இந்நிறுவனத்தின் சிஈஒ தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறாராம்.
ஆணியடிச்சா ஃபிரேம். பிடுங்கிப் போட்டா விறகுன்னு எல்லாமே இவர் தீர்மானிக்கும் விஷயமாக இருப்பதால், ஏற்கனவே பெற்ற ’சுட்டப்பழ தயாரிப்பாளர்’ என்ற கெட்ட பெயரை இந்த படத்திலாவது நீக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாராம்.
                             www.tamilcinema.com

No comments:

Post a Comment