கூத்துப்பட்டறை நடிகர்களை கொல்லன் பட்டறை இரும்பு போலவே பயன்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அவ்வளவு அடி மற்றும் நொறுக்குதலும் இவர்களுக்குதான் கிடைக்கிறது அடுக்கடுக்காக.
பெரும் எதிர்பார்ப்போடு தமிழ்சினிமாவில் வீறு நடை போட்ட பசுபதி ஒருகூத்துப்பட்டறை தயாரிப்புதான். ஆனால் இவராகவே வெட்டிக் கொண்ட குழியா, அல்லது மண்வெட்டியோடு மெனக்கட்டு வந்தார்களா தெரியாது. சில பல இயக்குனர்களால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போனார் பசுபதி. நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான ரோல் கொடுத்து இவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் வசந்த பாலன்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல செய்தி வந்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய ரோல் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
அரசல் புரசலாக கசிந்த தகவலையடுத்து பலரும் பசுபதிக்கு போன் செய்து அப்படியா என்று கேட்டால், அப்படியா என்கிறாராம் அவரும் அதே பிரமிப்புடன். வேறொன்றுமில்லை, இங்கு வந்துட்டு போன விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றாராம் மணி.
ஐஸ்வர்யா ராய் நடிச்சாலே அலட்டிக் கொள்ளாத ஆட்களுக்கு, மணி அண்டு பசுபதியின் இந்த ரகசிய காப்பு பிரமாணம் ங்கொய்யென்று சிரிக்க வைக்கிறது.
No comments:
Post a Comment