பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராம் அழகான படங்கள் அடங்கிய 2012 வருட காலண்டரை வெளியிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும், நடிகை சமீரா ரெட்டியும் கலந்து கொண்டு காலண்டரை வெளியிட்டனர்.
ஏ.வி.எம்-ல் நடந்து வரும் ‘மாற்றான்’ படப்பிடிப்பிற்கு இடையில் நிகழ்ச்சி நடைபெறும் ஹயாத் ஓட்டலுக்கு வந்திருந்தார் சூர்யா. ஒரு நடிகர் தான் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இடையில் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே, அந்த நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் குறிப்பிட்ட நடிகருக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தராக இருப்பார்?
ஆமாம்... நடிகர் நடிகைகளை பொருத்தவரை சாதாரணமானவரல்ல இந்த வெங்கட்ராம். சிம்புவில் ஆரம்பித்து கமல் ரஜினி வரைக்கும் கூட இவரது கேமிரா முன் நின்றவர்கள்தான். அதுமட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகள் அத்தனைக்கும் முக்கியமான புகைப்படக் கலைஞர் இந்த வெங்கட்ராம்.
காலண்டரை வெளியிட்ட சூர்யா, இந்த வருடம் நடிகைகளை மட்டும் காலண்டருக்கு பயன்படுத்தியிருக்கிறாரே என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நான் வெங்கட்ராமுக்கு தொடர்ந்து போன் அடித்தேன். அவர் எடுக்கவே இல்லை. எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதுக்கும் பதில் இல்லை. என் ஐபோன்ல ஒரு வசதி இருக்கு. அது மூலமா நண்பன் எங்க இருக்காருன்னு கண்டு பிடிச்சேன். அப்புறம்தான் இப்படி ஒரு வேலை போயிட்டு இருக்குன்னு தெரிய வந்துச்சு. அடுத்த வருடமாவது என்னையெல்லாம் எடுத்து காலண்டர்ல போடணும் என்றார்.
இந்த காலண்டரில் த்ரிஷா, சமீரா ரெட்டி, சமந்தா, அமலா பால், ஜெனிலியா, தீக்ஷா சேத் ஆகியோர் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில், இந்த புகைப்படங்களை வெங்கட்ராம் படமாக்குவதையும் படமெடுத்து காண்பித்தார்கள். அதையே ஒரு படமாக ஓட்டினால் கூட ஐம்பது நாளை கிராஸ் பண்ணும் போலிருந்தது. அத்தனை சுவாரஸ்யம்...
No comments:
Post a Comment